You Are Here: Home » Articles » தொண்டைமானாறு பிள்ளையார் கோயில்

தொண்டைமானாறு பிள்ளையார் கோயில்

தொண்டைமானாறு பிள்ளையார் கோயில்

தொண்டைமானாற்றில் அமைந்துள்ள கோயில்களில் ஒன்றான தச்சகொல்லை பிள்ளையார் கோயிலைப்பற்றி எமக்கு கிடைத்துள்ள குறிப்புகளை தொகுத்து இரு பகுதிகளாக இங்கு தருகிறோம்.

 

 

pillaiyar

 

பகுதி 1

எமது ஊரின் சிறப்புகள் பல. இவற்றில் ஒன்று கோயில்கள். எமது சிறிய கிராமத்தில 5 கோயில்கள் அமைத்து சிவன், அம்பாள், காளி, பிள்ளையார், முருகன் எல்லோரையும் வழிபடும் நாங்கள் ஆக்கிரமிப்பாளர் போத்துகீசர் அமைத்த பிற சமய வழிபாட்டுத்தலத்தை நிலைத்திருக்க அனுமதிக்கவில்லை. இக்கோயில்களில் ஊர் மக்களால் பெரிதும் பேணப்படுவது பிள்ளையார் கோயிலாகும். ஊரின் கிழக்குப்பகுதியில் கோபுரம், தீர்தக்கிணறு, மடப்பள்ளி, எழுந்தருளி மண்டபம் என்பவற்ரோடு இருக்கும் பிள்ளையாருக்கு குளிப்பதற்கு என அருகில் இருந்த தீர்தக்குளம் தூர்க்கப்பட்தால் கோணேசர் குளத்திற்கு போய்வரவேண்டிய நிலை. ஊர் இளையோர் கூடி செய்யும் ‘பொடியள் திருவிழா’வும், காப்பு பூசையும் இங்கு வெகு சிறப்பானது. தவில் கச்சேரி, பிரசங்கம் ‘சின்னமேளம்’ ஏராளம் கடலை, அவல் என ஒரே களைகட்டும் நாட்கள் இவை.

இந்த வழிபாட்டுக்குரிய ‘பிள்ளை’ யார்?. எமது ‘சமயம்’ இந்து சமயம் என்று சொல்கின்றோம். எனது அறிவிற்கு எட்டியபடி இது ஒரு கூட்டு. இடையிட்டு வந்தது. இதில் சைவம் ஒரு மூலகூறு . ‘Wikipedia’ வில் சொல்லப்பட்டிருக்கும் விபரங்களின் படி ஆதி வழிபாட்டு முறைகளில் ஒன்றான சைவம், அழிந்துபோன சிந்துவெளி  மக்களின் நாகரீகத்தின் உச்சகட்டத்தில் (2500- 2000 BC)  லிங்க வழிபாடாக இருந்திருக்கிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் இதை தெரிவிக்கிறதாம்.   அப்போது (சிவன் );  பசுபதி ஒருவனே தெய்வம.; அவனே முழுமுதல் கடவுள். இந்த மக்கள் ‘மொசப்பத்தேமிய’ மக்களுடனும் கடல்வணிகம் செய்ததால் வழிபாட்டுமுறைகளில் சில கலப்புகள்,ஒற்றுமைகள் இருந்திருக்லாம். இதன்பின் வந்தது வேதகாலம் (1500 – 500 BC). சிவன், உருத்திரன் என வேதங்களில் இந்த தெய்வம் குறிப்பிடப்பட்டது. சிவன் , உருத்திரன் என்பன ‘பிரமம்’ அல்லது ‘இறைவனின்’ வடிவங்கள் என சொல்லப்படுகிறது. இதன் பின்பு வந்ததுதான் புராணகாலம். இங்கு சைவம் இரு பெரும் கூறுகளாக பரிணமித்திருக்கிறது.  இதில் ஆதிசங்கர் என அழைக்கப்பட்ட சங்கராச்சாரியார் வழிவந்த ‘புராணமற்ற சைவம்’ (Non- Puranic Saivam) என்ற பிரிவில்தான் சிவன், விஷ்ணு, சக்தி, விநாயகர், சூரியன் என 5 தெய்வங்களை முதல்வர்களாக வைத்தார்கள். புராணங்களில் விநாயகரின் பெயர் வந்தாலும் குப்த சாம்ராட்சிய காலத்தில்தான்; (AD 400- 600)  இவருக்கு வடிவம் கிடைத்ததாக தெரிய வருகிறது.   புராணமற்ற சைவம் வழிவந்ததுதான் தமிழரின் சைவம் எனப்படுகிறது. இது நாயன்மார்களின் காலம். மாமல்ல சக்கரவர்தியின் வாதாபி படைஎடுப்போடு (AD  630-660) தமிழ் நாட்டுக்கு வந்தவர் ‘வாதாபி கணபதி’. இதில் வேடிக்கை என்னவென்றால் விநாயகரைப்பற்றி வேதங்களில் குறிப்பிடாதபடியால் இவர் திராவிடரிடமிருந்து வந்ததாகவும் சிலர் சொல்கிறார்களாம்  என ‘Wikipedia’  தெரிவிக்கிறது.  ஆனால் உலகின் பல பாகங்களிலும், ஏன் ‘கண தெய்யோ நாண்ட கீயா’ என்று சொன்ன சிங்கள சகோதரர்கள் கூட பிள்ளையாரை வணங்குகிறார்கள்.

இனி எமது பிள்ளையாரிடம் வருவோம். திரு. வீரகத்திப்பிள்ளை இராசசேகரம் அவர்களின்  ‘வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்- வரலாற்று ஆய்வு நூல்  1994′  இல் இருந்து எடுத்த குறிப்புகள் .    (நன்றி)

இக் கோயில் 1815ம் ஆண்டு தொடங்கப்பட்டதாயும் 1892ல் (யாழ்ப்பாணம்) கக்சேரியில் ‘சித்திவிநாயகர்’ என பதியப்பட்டதாகவும் அறிகிறோம்.  அப்போது பனை ஓலையால் வேயப்பட்ட சிறு கட்டடமாக இருந்ததாக தெரிகிறது.         1911 அளவில்தான் கிரமமான கட்டிடங்கள் அமைத்து பூசைகளும் திருவிழாக்களும் தொடங்கியதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இக்கோயிலின் வடக்கு(வெளி)வீதி கெருடாவிலுக்கு போகும் பாதையூடாக இருக்கிறது. தெற்கு வீதி தனியார் காணிக்கூடாக செல்ல வேண்டி இருப்பதை அறிந்த மலேசியாவில் வசித்த எம்மூர் வாசிகள் அந்தக் காணியின் ஒரு பகுதியை கோயிலுக்காக வாங்கினார்கள். இக் காணிக்கு உறுதியில் இருந்த பெயர் ‘தச்சகொல்லை’. ‘ ……..    ‘இக் கோயிலின் குளம் இதன் வடகிழக்கு மூலையில் இருந்து தூர்க்கப்பட்டு கெருடாவிலுக்கான பாதை அதன் மேல் போடப்பட்டிருக்கிறது. …………தனிப்பட்டவர் பராமரித்துவந்த இக் கோயில் 1956 தை மாதம் பொதுக்கோயிலாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.  இக்கோயிலின் கோபுரம் ஓவசியர் சின்னையா (மறு நாமம்)   திரு. வெள்ளைத்தம்பி அவர்களால் கட்டப்பட்டது. வடக்கு வீதியில் உள்ள மடம் (வடகிழக்கு மூலை?) திரு சின்னத்தம்பி இராமசாமி அவர்களாலும், முன்பாக உள்ள கிணறு திரு. வீ. இராசரத்தினம் அவர்களாலும் கட்டப்பட்டது. …’  ( இது பற்றிய வேறு விபரங்களும் இந்த அரிய நூலில் காணலாம்)

திரு இ. சிறீதரன் அவர்களும், திரு அ. விசாகரத்தினம் அவரகளும் வழங்கியன:

கோயிலின் வடமேற்கு மூலையில் இரண்டு மடங்கள் இருந்தன. ஓன்று மிகப்பழையது. திரு விசாகரத்தினம் சொல்லிய குறிப்பின்படி இது அவருடைய முன்னோர்களால் கட்டப்பட்டிருக்கிறது. ஊரில் தற்போது பிள்ளையார் கோயிலின் உள்ளே திரு முத்துத்தம்பி தருமரத்தினம் அவர்களால் செய்யப்படும் சித்திரைக்கஞ்சி அக்காலத்தில் திரு விசாகரத்தினம் அவர்களுடைய முன்னேர்களால் இந்த (பழைய) மடத்தில்தான் செய்யப்பட்டு வந்திருக்கிறது. காலப்போக்கில் இவர்களால் கைவிடப்பட்டதை அறிந்து ஊரில் இப்படியான பொதுக்காரியங்கள் தடைப்படக்கூடாது என்ற நல்லநோக்கில் திரு மு. தருமரத்தினம் அவர்களுடைய பெற்றோர்கள் இரண்டாவது (புது) மடத்தையும் கட்டுவித்து அதில் சித்திரைக்கஞ்சி செய்வதை தொடர்ந்தார்கள். பிள்ளையார் கோயிலடிச்சந்தி ஒரு முக்கியமான பஸ் தரிப்பு இடமாகும். கெருடாவிலில் இருந்து வருபவர்கள் பேரூந்துக்காக காத்திருக்கும்போது வெய்யில் மழை என அல்லல்பட்டார்கள். இதைப்போக்க அவ்விடத்தில் ஒரு தரிப்பு கட்டுவதாக மக்கள் முடிவெடுத்தபோது திரு அ. விசாகரத்தினம் அவர்கள் பழைய மடத்தின் முற்பகுதியில் ஒரு தரிப்பு ( Bus Shelter) ஒன்றை  கட்டிக்கொடுத்ததோடு பின்னால் இருந்த பகுதியையும் புதிப்பித்து தந்தார். …….. தற்போது சின்னப்பள்ளிக்கூடம் இருக்குமிடத்தில் முன்பு ஒரு கேணி, ஒரு மடம், ஒரு சிறியபூக்கொல்லை என்பன இருந்திருக்கிறது. இந்த மடத்திற்கு அந்தியேட்டி மடம் என பெயர் இருந்ததாம். ‘கொல்லையில்’ சிவத்த, வெள்ளை அலரிகள் இருந்தனவாம்.  தற்போது கோயிலின் முற்பாக உள்ள கிணறும் அலரி மரங்களும் திரு இராசரத்தினம் அவர்களால் அமைத்துக்கொடுக்கப்பட்டது

தொடரும்…

About The Author

Number of Entries : 11

Leave a Comment

You must be logged in to post a comment.

© 2013 Thondaimanaru.com