You Are Here: Home » Articles » தொண்டைமானாறு பிள்ளையார் கோயில் -பகுதி 2

தொண்டைமானாறு பிள்ளையார் கோயில் -பகுதி 2

தொண்டைமானாறு பிள்ளையார் கோயில் தொண்டைமானாற்றில் அமைந்துள்ள கோயில்களில் ஒன்றான தச்சகொல்லை பிள்ளையார் கோயிலைப்பற்றி எமக்கு கிடைத்துள்ள குறிப்புகளை தொகுத்து முதல்பகுதியை முன்பு தந்திருந்தோம்.

pillaiyar temple

பகுதி 2

திரு து. துரைரத்தினம் வழங்கிய  குறிப்புகள்:

1965 ஆண்டளவில் மயில்வாகனம் உருத்திரமூர்த்தியும் மற்றும் இருவரும் மணியகாரர்களாக இருந்த காலத்தில் துரையப்பா பாலசுந்தரராசா அவர்கள் என்iயும் ஞானேஸ்வரனையும் அழைத்து சுமார் 25 செவ்வரத்தை பதிகளை தந்து கோயிலுக்குள் மதிற்சுவருக்கு அருகில் நடுமாறு கூறியதால் நாங்கள் அவற்றை நாட்டி பராமரித்தோம் பிற்காலத்தில் மற்றய கோயில்களுக்கும் மலர்களைத் தரக்கூடியளவுக்கு அவை நன்றாக வளர்ந்தன.

வடபகுதி ஆலயங்களில் சில சமூகத்தினர் உள்ளே சென்று வழிபடுவது  மறுக்கப்பட்டு வந்துள்ளதை   ஆலயப்பிரவேசம் என்ற நடவடிக்கை மூலம் தீர்க்கமுடியும் என சிலர் கருதி     அம்முயற்சியில் 1967 ம் ஆண்டளவில ஈடுபட்டதை அறிந்து பிள்ளையார் கோயில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டன. 3 வருடங்கள் இந்த நிலை நீடித்தது. இளைஞர்கள் இதில் தலையிட்டு 1970 ம் ஆண்டு வழமையாக வருடாவருடம் நடைபெறும் பொதுக்கூட்டம் அழைக்கப்பட்டது. அதில் கோயிலை மீண்டும் வழமைபோல சிறப்பான திருவிழாக்களுடன் நடாத்தவேண்டுமென தீர்மானிக்கப்பட்டதுடன் இளைஞர்களே மணியகாரர்களாக நியமிக்கப்பட்டனா.; சின்னத்தம்பி ஆனந்தவேல் ஐயரத்தினம் சிறிரஞ்சன் ஆகியோரும் நானும் மணியகாரர்களாக தெரிவுசெய்யப்பட்டோம். பலகாலம் திருத்தப்படாமல் இருந்த காரணத்தால் கோபுரங்களின் பாவைகள் உடைந்தும் கூரைகள,; மதில்கள் பாதிக்கப்பட்டும் இருந்தன. அடுத்த திருவிழாவிற்கு முன்பாக இவற்றை திருத்துவது நல்லது என நாங்கள் தீர்மானித்து விசேட பொதுக்கூட்டம் ஒன்றை கூட்டி அதில் அனுமதியும் பெற்றோம். இந்தநேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். கூட்டம் முடிந்ததும் குருக்கள் என்னைத்தனியாக சந்தித்தார். ‘மாஸ்ரர் நீங்கள் வாழ்க்கையை இன்னும் அனுபவிக்காதவா.; நீங்கள் இன்னும் அதிககாலம் வாழவேண்டும் . கடந்தகாலங்களில் பல கோயில்களில் கும்பாபிஷேகங்களை முன்னின்று நடாத்துபவர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள,; எனவே நீங்கள் இதை பொறுப்பெடுக்காதீர்கள்’ என அயலூர்களில் நடந்தவற்றை ஆதாரத்துடன் கூறினார். அதற்கு நான் சொன்னேன் ‘கடவுள் நன்மை செய்பவரை என்றம் தண்டிக்கமாட்டார். அப்படி எனக்கு எதுவும் நடந்தாலும் அது எனக்கு நன்மை செய்வதற்காகவே இருக்கும’; என கூற அவரும் ‘யோசித்துச் செய்யுங்கள்’ என தெரிவித்தார்.; குருக்கள் சொன்னதில் சில நிகழ்வுகள் நடந்தபோதும்    நானோ எனது குடும்பமோ எவ்வித பாதிப்படையாதது மாத்திரமல்ல அதன்பிறகுதான் நான் குட்டிமாஸ்ரரும் ஆனேன்.  இராசகோபுரம் பாதிப்புகள் சீர்திருத்தப்பட்டு பாவைகள் எல்லாம் புதிதாக அமைக்கப்பட்டன. மூலஸ்தாபன கோபுரமும் பாதிக்கப்பட்டிருந்தது ஆனால் அதை திருத்துவதற்கு பிள்ளையார் சிலையை பாலஸ்தாபனம் செய்வேண்டும் இவற்றிற்கான செலவுகளும் அதிகமாகும் ஆகையால் மீண்டும் பொதுக்கூட்டத்தை அழைத்தோம். மூலஸ்தாபன ஸ்தூபியை திருத்துவதற்கான ஒப்பந்த தொகையான 3000 ருபாவை பெற இ. தொண்டைமானாபன் அவர்களுடனும், பெயின்ற் செலவு 3500 ருபாவை பெறுவதற்கு இ வடிவேற்கரசனும் அவர்களுடனும்  கதைத்து ஒழுங்கு செய்திருந்தேன். பொதுக்கூட்;டத்தின் தீர்மானப்படி மூலஸ்தாபன ஸ்தூபியையும் புனருத்தானம் செய்து கட்டடங்கள் மதில்களில் ஏற்பட்டிருந் உடைவுகளையும் திருத்தி  இரண்டாவது வருடம் மிகவும் சிறப்பாக 3 யாகசாலைகள் அமைத்து நீர்வேலி கந்தசாமி கோயில் குருக்களான சிறி இராசேந்திரக் குருக்கள் தலைமையில் கும்பாபிசேகங்களை நடாத்தப்பட்டது. தற்போதுபோல வெளிநாட்டிலிருந்து பணம் எதிர்பாக்கப்படாத நிலையில் ஊரிலும் மலேசியாவில் வாழ்கின்ற எங்கள் ஊரவர்களிடமும் நிதிசேர்கப்பட்டது. கிராமத்து இளைஞர்கள் சிரமதான பணிகளில் ஈடுபட்டதால் 28 ஆயிரம் ருபாயில் இவற்றை செய்யக்கூடியதாக இருந்தது.

Kabul_ganesh5th CE_khingle

 

கோயிலுக்கு கிழக்குப்புறமாக வாசிகசாலைக்கென பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட கட்டடமொன்று இருந்தது. அதில் பெரிய மரங்கள் வளர்ந்து பற்றையாக இருந்தது. அதன் நிறுவனர்கள் அனுமதிக்காததால் அது அகற்றப்படாமல் கோயிலின்முன் அசிங்கமாக இருந்தது. அதன் அத்திவாரப்பகுதியும் பிற்பக்க சுவரும் தவிர்ந்த மற்ற பகுதிகளை அகற்றி துப்பரவாக்க தீர்மானிக்கப்பட்டது. அப்போது கடைகார திரு பேபி, கார்க்கார திரு சாமி இருவரையும் சந்தித்து கதைத்ததன் பேரில் அவர்களும் அதற்கு சம்மதிக்க அந்த கட்டடத்தை இடித்து துப்பரவாக்கினோம் .கோயிலுக்கு வரும் பக்தர்கள் கால்கழுவுவதற்கு கிழக்குப்புறத்தில் இருந்த கிணற்றிற்கு செல்ல வேண்டியிருந்ததால் கதிரிப்பிள்ளை சீனிவாசகம் அவர்கள் தண்ணீர்த் தொட்டியொன்றை அமைத்து தந்தார். பரமசாமி பத்மநாதன் மின்சார பம்புக்குரிய பணத்தை தந்தார்.  கோயிலின் தெற்குப்பகுதியில் முல்லை மல்லிகை நந்தியாவட்டை அலரி மஞ்சள் பூ போன்ற பூமரங்களை நாங்கள் வளர்து வந்தோம். எனது நீரிறைக்கும் இயந்திரத்தை இராசாதுரை வைகுந்தநாதன்(nஐகன்) வாராவாரம் எடுத்துச்சென்று நீர் பாய்ச்சுவார். தண்ணீர்த்தொட்டியும் பம்பும் பொருத்தப்பட்டபின்னர் நீர் பாய்ச்சுவது இலகுவாயிற்று. 1983ம் ஆண்டு ஒருநாள் கோயிலின் குருக்கள் என்னை அழைத்து பிள்ளையரின் மூலஸ்தாபன உருவம் நன்றாக தேய்ந்து விட்டது. பூக்கள் வைத்தால் விழுந்துவிடுகின்றன. மாற்றினால் நல்லாயிருக்கும் என்று கூறினார்.உருவத்தை மாற்றுவது என்பது எளிமையான காரியமன்று எனவே சரி யோசிப்போம் என்று கூறிவிட்டேன். இதேபோல் அப்போது மணியகாரர்களில் ஒருவராக இருந்த சீனிவாசகம் இரத்தினவாசகத்திடமும் ஐயர் இதை கூறியுள்ளார். எங்கள் ஊரில் சந்தியில் பெற்றோல் நிலையம் வைத்திருந்த நல்லையா அண்னை அடிக்கடி அளவெட்டி விநாசித்தம்பி மாஸ்ரரிடம்(சந்நிதி திருவிழாக்காலங்களில் தினமும் பிரசங்கம் செய்பவர்) சோதிடம் கேட்கப் போவார்.அன்று நல்லையா அண்ணையும் மனைவியும் புறப்படும் போது சீனிவாசகம் இரத்தினவாசகமும் தானும் வருவதாக கூற அவரையும் அழைத்து சென்றனர். விநாசித்தம்பி மாஸ்ரர் ஓலையைப்பார்துச்சொல்லுமுன்பு முருகன் அருள்பெற்று அருள்வாக்கு கூறுவார். அன்று இவர்கள் அவருடைய அறைக்குள் சென்று சந்தித்தபோது பிள்ளையரின் அருள்பெற்று பிள்ளையார் போல பேசினார். இரத்தினவாசகத்தை நோக்கி  ‘ நீயும,; எனது தம்பி முருகனுக்கு இப்போது பெருந்தொண்டு செய்து கொண்டிருக்கின்ற மற்ற மணியகரன் துரைரத்தினமும் என்னை மாற்ற முயற்சிக்கின்றீர்கள,; அது வேண்டாம்’ என உச்சதொனியில் கூறினார் இச்சம்பவத்தை நல்லையா அண்ணை அங்கிருந்து வந்தபின் என்னிடம் கூறினார். அதை இன்றும் மறவாத அவர் மனைவி இந்திராவை 7 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் சந்தித்தபோது இச்சம்பவத்தை நினைவு படுத்தினார். இதில் என்னவென்றாhல் நான் விநாசித்தம்பி மாஸ்ரரை சந்தித்ததும் இல்லை எனது பெயரோ நான் பிள்ளையார் கோயிலிலும் சந்நிதியிலும் பணிசெய்து கொண்டிருப்பதோ விநாசித்தம்பி மாஸ்ரருக்கு தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை. 2013 அதாவது இவ்வருடம் கோபுரங்களை புதிதாக அமைத்தும் பல சிறப்பான வேலைகளையும் செய்த போதும் பழைய பிள்ளையார் உருவமே இருக்கின்றது இதை ஞாபகப்படுத்துகின்றது.

அக்காலகட்டத்தில் கோயிலுக்கு குறிப்பாக திருவிழாக்களுக்கு வருகின்ற மக்கள் தொகை குறைவாகவே இருந்தது. சி நற்குணம,; nஐயரத்தினம் சிவப்பிரகாசம் அவர்கள் நடாத்துகின்ற 2ம் திருவிழாவும்; பெரியகடற்கரை மக்கள் நடாத்துகின்ற 7ம் திருவிழாவும் ஊர் இளைஞர்கள் ஊரில் நிதி சேர்த்து நடாத்துகின்ற 9ம் திருவிழாவும் மாத்திரம் மேளக்கச்சேரிகள் சின்னமேளங்கள் மற்றும் பெரிய சப்பறங்கள் போன்ற அலங்காரங்களுடனும் நிறைய அமுதுகளும் கொடுக்கப்பட்டு சிறப்பாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்றய நாட்களிலும் மக்களை வரவழைக்கக் கூடிய வகையில் அக்காலத்தில் பிரபல்யமான நல்லை மணிஐயரின் பிரசங்கம் மற்றும்           திரு சின்னமணியின் வில்லுப்பாட்டு போன்ற  நிகழ்ச்சிகள்  திருவிழாவின் 9 நாட்ளும் தொடர்ந்து நடாத்தப்பட்டன. இச்செலவுகளை சில திருவிழாக்காரர்களும் மற்றய சிலரும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனால் மக்கள் வரவும் அதிகரித்தது. சந்நிதியின் திருவிழா காலங்களில் சந்தியிலிருந்து இராக்கா வளவினூடாக செல்கின்ற பாதை இருட்டாக இருந்தது. எனவே அஙகிருந்த மின் கம்பங்களில் பொருத்துவதற்காக 10 மேக்குரி விளக்குகளுக்குரிய பாகங்களை நான் வாங்கிக் கொடுக்க சபா சிவகணேசநாதன் அவற்றை பொருத்தித்தர மின்சார சபையுடன் கதைத்து றோட்டை ஒளிமயமாக்கினோம். அடுத்தவருடம் விளக்குகளை வருடம் முழுவதும் பாவிப்பதற்கு நிரந்தரமான விளக்குகளை பொருத்தியதால் குழாய் விளக்குகளை பிள்ளையார் கோவிலுக்கு பாவிக்குமாறு இராசதுரை வைகுந்தநாதன், இராசேந்திரம் முரளிதரன், நடேசு சுந்தரலிங்கம், நடேசு பிறைசூடி தம்புவின் மகன் அப்புச்சி ஆகியவர்களை பொறுப்பாக நியமித்து பிள்ளையாருக்கு சொந்தமாக மின் விளக்கு சேவையை ஆரம்பித்தோம். திருவிழாக்காலங்களில் சுவாமியை அலங்கரிக்க தேவையான மின்விளக்குகளை சிலரிடமிருந்து அன்பளிப்பாகவும் மற்றும் சைக்கிள் பாதுகாப்பு சேவையை சந்நிதி திருவிழா காலங்களில் நடாத்தியும் வீடியோ மூலம் சினிமாப்படகாட்சிகள் நடத்தியும் நிதியை சேர்த்து ஒழுங்கு செய்தோம்.. இதில் கந்தசாமி தேவானந்தன்(ஈசு), இராசதுரை வைகுந்தநாதன், தம்பு சிவானந்தம் மகன் அப்புச்சி,  இராசேந்திரம் முரளிதரன், நடேசு சுந்தரலிங்கம், நடேசு பிறைசூடி ஆகியோர் பெரும் பங்களித்தனர். மணியகாரர்களும் தேவையான ஒத்துழைப்பை வழங்கினோம். ஆத்துடன் சேர்த்து கோயிலுக்கென ஒலிபெருக்கியும் வாங்கப்பட்டது. ஒருமுறை பாடசாலையில் நிதி சேர்ப்பதற்காக வீடியோ சினிமா ஏற்பாடு செய்திருந்தோம். பாடாசாலை அனுமதி எனது பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக 500 க்கு மேற்பட்ட மக்கள் படம் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென 10 க்கு மேற்பட்ட பொலிசார் மேடையில் தோன்றினர். யார் இதன் ஏற்பாட்டாளர் என ஆத்திரத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்த விசேடமாக வந்த இன்ஸபெக்ரர் கத்தினார். நான் கடைசி வரிசையில் நின்றிருந்தேன். யாரும் முன்னுக்கு போகவில்லை. கரவெட்டியில் இருந்து வந்த வீடியோ உரிமையாளர்கள் பயத்தில் ஓடிவிட்டார்கள். பாடசாலை அனுமதிப்பத்திரம் எனது பெயரில் இருந்ததாலும் கோவிலுக்கான மின்சார விளக்குகளுக்கான நிதி நிகழ்வு என்பதாலும். சிறிது நேரத்தின் பின்னர் நான் முன் சென்றேன். இன்ஸபெக்ர் கோபத்தில் என்னை நோக்கி வந்தார். குறுக்கே வந்த வல்வை பொறுப்பதிகாரி ‘இவர்களை எனக்கு தெரியும் அவர்கள் கோயில் நிதி சேகரிப்புக்காகத்தான் இதை நடாத்துகின்றார்கள’; என்று சொன்னார். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவரோ ‘ இவ்வளவு பெண்களுமிருக்க இவர்கள் பாலியல் சம்பந்தமான படம் போடுகின்றார்களா” என கூறியபின்னர்தான் நிலைமை எங்களுக்கும் புரிந்தது. ஏனெனில் யாழ் பொலிஸ் நிலையத்தில் (pநவவைழைn) முறைப்பாடு செய்தவர்கள் எங்களை செக்ஸ் படம் காட்டுவதாக கூறியிருந்தனர்.

கோயிலின் மணி கோபுரத்தின் வடக்குப்பக்கத்து ஸ்தூபியொன்றில் பொருத்தப்பட்டிருந்தது. மணியை உள்ளிருந்து அடிக்கும்போது ஓசை குறைவாக இருந்த காரணத்தால் புதிதாக மணிக்கூண்டு ஒன்றை அமைக்க முடிவெடுத்தோம். துரைராஐh சண்முகபாலன் அவர்கள் இதற்கான செலவை பொறுப்பேற்பதாக கூறினார். நீர்வேலி கந்தசாமி கோயில் சிறி இராசேந்திரக்குருக்களை அழைத்து மணிக்கூண்டிற்கான இடத்தை தெரிவுசெய்து எழுந்தருளி மண்டபத்திற்கு இடப்புறமாக 1984 ல் கட்டி முடித்தோம்.கோயிலின் முன் வீதியில் லொறிகளை உள்விட்டு கழுவி வந்தனர் அத்துடன் நாங்கள் திருவிழா காலங்களில் மக்கள் இருப்பதற்காக போடுகின்ற மணலும் மழைகாலத்தில் கரைந்து கெருடாவிலுக்கு செல்லும் வீதிவழியாக வெளியேறுவதால் வடக்குப்பக்கத்தில் ஒரு அடி உயரமான தடுப்புச்சுவரை அமைத்தோம். இதனால் வீதியை அசுத்தமாக்கலும் மண் கரைவதும் தடுக்கப்பட்டது

segarampillaiyarகோயிலின் தெற்கு வீதி திருமதி ராணி ஐகநாதன் திரு ஞானத்திலகம் நாராயணசாமி     திரு துரைராஐலிங்கம், மற்றும் திரு சாந்தரத்தினம் அவர்களின் சகோதரர் ஆகியோருக்கு சொந்தமாக இருந்தது. இக்காணிகளில் சிலவற்றில்  பயிர்கள் செய்யப்பட்டதால் திருவிழா காலங்களில் வெளி வீதி வருவதில் சிரமமேற்பட்டது. இக்கால கட்டத்தில் சாந்தரத்தினத்துடைய சகோதரர்  மலேசியாவிலுருந்து ஊருக்கு வந்திருந்தார். அவராகவே தனது பங்கை தருவதாக கூறியதன்பேரில் அப்போது வழக்கறிஞராக இருந்த எங்ககள் ஊரவரும் அளவெட்டியில் வசித்தவருமான திரு புண்ணியமூர்த்தி  அவர்களிடம் கேட்டுக்கொண்டதன்பேரில் அனைத்து செலவுகளையும் அவரே பொறுப்பேற்று காணியை கோயிலுக்கு பெற ஏற்பாடு செய்தார். இதை ஆரம்பமாகக் கொண்டு திருமதி ராணி nஐகநாதன அவர்களையும் திரு ஞானத்திலகம்   அவர்களையும் சந்தித்தபோது அவர்களும் காணியை கோயிலுக்கு தர ஒத்துக்கொண்டனர் 1984 ஆண்டுவரை காணிகள் எழுதுவதில் பிரச்சனைகள் இருந்தது. அதன்பிறகு எல்லாக்காணிகளும் எழுதப்பட்டதாக அறிகின்றேன். 1967 தொடக்கம் 1984 ஆண்டு டிசம்பர் 31 ந்திகதி(நான் ஊரிலிருந்து கனடாவுக்கு வரும்வரை) ஆலய பரிபாலன் சபைத்தலைவராக இருந்த காலத்தில் ஊர்மக்கள் உதவியுடன் கோயிலின் வளர்ச்சியில் எனது பங்கையும் செலுத்திய எங்களுக்கு பிள்ளையாரின் அருள் எப்போதுமெ கிடைத்தது என்றால் மிகையாகாது.கோயில் அழகாகவும் திருவழாக்கள் சிறப்பாகவும் இருந்ததாலும் பூசைகள் திருவிழாக்கள் சரியான நேரங்களில் நடத்தப்பட்டதாலும் மக்கள்  பெருமளவு வரத்தொடங்கினர். திரு ம. உருத்திரமூர்த்தி வழங்கிய குறிப்புகள்: பிள்ளையார் கோயில் நிர்வாகத்தை நடத்த ஆண்டு தோறும் ‘மணியகாரர்கள்’ ஊர்மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள். நெடுங்காலமாகவே வயதில் மூத்தவர்கள் வகித்துவந்த இந்த இடங்களை முதல் முதலாக 1964ம் (??) ஆண்டளவில் இளையோரிடம் கொடுத்தார்கள். கோயிலின் தெற்குவீதி தனியாரின் காணிக்கூடாகத்தான் இருந்தது. சில பிணக்குகளால் இது தடைப்பட திருவிழா பல காலமாக உள்வீதி சுற்றுவதோடு முடிந்துவிடும். இதை மாற்றும் எண்ணத்தோடு தெரிவு செய்யப்பட்ட இளையோர் அந்தக்காணி சம்பந்தப்பட்டவர்களோடு நயம்பட கதைத்தன்மூலம் பிணக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டு வீதியும் ஊர் இளைஞர் கூடி திருத்தி அமைக்க பிள்ளையார் வெளிவீதியும் வந்தார்.  பிள்ளையாருக்கு தினமும் பூசை செய்ய ஒரு ஐயர் இருந்தாலும் திருவிழா செய்வதற்கு அம்மன் கோயில் ஐயர்தான் வருவார். பிள்ளையார்கோயில் ஐயர் இந்தியா சென்று குருக்கள் பட்டம்பெற்று வந்தபின் இதை மாற்றுவதற்கு இந்த மணியகாரர் எடுத்த முயற்சி பலனளிக்காமல் பல காலம் சென்றபின்தான் இவர் திருவிழாபூசைகள் செய்யவும் பலன் கிடைத்தது.

முடிவுரை

இந்தக்கட்டுரை ஒரு கூட்டு முயற்சி. இதில் வலிந்து சொல்லப்படவேண்டியது என்னவென்றால் இதில் வரும் விடயங்கள் திரு உருத்திரமூர்த்தி, திரு துரைரத்தினம், திரு சிறீதரன், திரு விசாகரத்தினம் ஆகியோரிடமிருந்தும், மேலே உள்ள படம் உட்பட்ட வேறுசில விபரங்கள் திரு இராசசேகரம் எழுதிய புத்தகத்திலிருந்தும், ஏனயவை Wikipedia வில் இருந்து எடுத்து என்னால்  தொகுக்கப்பட்டதுமாகும்.  எங்களுக்கு தெரியாத இன்னும் பல விடயங்கள் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை மேலும் பூர்தியாக்க பலரும் உதவவேண்டுமென நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பி.கு.: மேலே உள்ள பிள்ளையார் சிலை எமது பிள்ளையார் அல்ல. கி.பி 6ம் நூற்றாண்டளவில் ஆப்கானிஸ்தானில் உருவானவர். இவர் இந்த அளவிற்கேனும் தப்பி இருக்கிறார். ஆனால் பாவம் இதெமாதிரியான ஒரு புத்தர் சிலைக்கு பெருத்த சேதம் செய்துவிட்டார்கள் அங்குள்ளவர்கள். ஆனாலும் அவர்கள் தமிழர் இல்லாததால் இலங்கையில் இருக்கும் எமது உறவுகள் தப்பினார்கள்.

Canada

Sept o6,2013

 

 

About The Author

Number of Entries : 11

Leave a Comment

You must be logged in to post a comment.

© 2013 Thondaimanaru.com